வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கஜேந்திரகுமார் பொன்னப்பலம் முரண்பாடு


தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிரதான தலைவர்களுக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் நேற்று முறுகல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலில் முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளால், பிரேரிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும்.
பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை வலியுறுத்தவேண்டும்

என அவர் விடுத்த கோரிக்கையை சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தநிலையில் அவர் பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று இரவு அவரை சாந்தப்படுத்தி, தேர்தல் விஞ்ஞாபனத்தில், அவரின் கொள்கைகளையும் பிரதிபலிக்கும் வகையில் மாற்றங்களை செய்யாமல், பொதுத்தேர்தலில் 'வெற்றிபெற்றால், இனப்பிரச்சினை தீர்வுக்காக பாடுபடுவோம்" என்ற வசனம் மாத்திரம் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அந்த மாற்றத்திலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திருப்தி கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’