வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அதிகார பகிர்வுதான் தீர்வு அதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்- திமுக


இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகார பகிர்வு ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு என்றும் அதற்கான அரசியல் தீர்வு காண முயற்சி களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலேயே இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு:

இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும், மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். ஏற்கனவே உறுதி அளித்தபடி இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர வாழ்வுக்கு வழி வகுக்கும் என்பதால், அதற்கான அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கும்“ வன்முறை கொடுமைகளுக்கு நிரந்தரமான முடிவினை ஏற்படுத்திடும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை ஆக்க வேண்டும் என்று மத்திய அரசை பொதுக்குழு வலியுறுத்துகிறது. தமிழ் மொழியை உயர் நீதிமன்ற மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாச்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’