-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
சனல் 4 தொலைகாட்சி ஒளிபரப்பிய காட்சிகள் உண்மையானவையே- அமெரிக்க நிறுவனம்
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தியதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை ஆராயும் சிறப்பு பிரதிநிதி பிலிப் அலஸ்ரனின் வேண்டுகோ ளின் பேரில் குறிப்பிட்ட காணொளிக் காட்சிகளின் நம்பத்தன்மையை தாங்கள் பரிசோதித்ததாக கொக்னி ரெக் என்ற அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிநவீன தொழில் நுட்பங் களை பயன்படுத்தி குறிப்பிட்ட காணொளிகள் உண்மை யானவை என்பதை தமது நிறுவனம் உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்னரே அவை மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ___
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’