-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
யாழ்ப்பாணத்தில் ஒரு பேர்ச் காணியின் விலை 4 லட்சம் ரூபா வரை... : ரிவிர
யாழ்ப்பாணத்திற்கு அதிகளவில் தெற்கு மக்கள் செல்வதனால் அங்கு காணிகளின் விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண நகரப் பிரதேசத்தில் ஒரு பேர்ச் காணியின் விலை நான்கு லட்சம் ரூபா வரை விற்கப்படுவதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்தம் காரணமாக கொழும்பு, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை பகுதிகளின் தொடர்மாடி வீடுகளில் குடியிருந்தவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த சில வாரங்களில் கொழும்பைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நல்லூர் பிரதேசத்தில் குடியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை பகுதி வங்கிகளில் வைத்திருந்த கணக்குகளை யாழ்ப்பாண கிளைகளுக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.
புலம்பெயர்ந்து சென்று ஐரோப்பிய நாடுகளில் வாழும் யாழ்ப்பாண மக்கள் காணிகளை கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’