
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் இம்மாதம் 27ஆம் திகதி அனுராதபுரத்தில் மதவழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தமது பிரசார நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளனர்.
அன்றைய தினம் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதி விகாரையில் மதவழிபாடுகள் நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து ஏனைய மதவழிபாடுகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் உறுதிப்பத்திரங்களை கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’