வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகா கைது:வழக்கு விசாரணை 26 ஆம் திகதி ஒத்திவைப்பு


ஜெனரல் சரத் பொன்சேகா கைது விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கினை விசாரித்த நீதவான் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு மறுத்துள்ள அதேவேளை, அவரை நெருங்கிய உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் நேரில் சென்று பார்க்க அனுமதி வழங்கியுள்ளார்.

அனோமா பொன்சேகா தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான இவ்வழக்கு விசாரணைகள் இம்மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா, ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரிய,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி ஆகியோர் நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’