
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா மார்ச் மாதம் 26 , 27, 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த 4 வருடங்களாக நடைபெறாமல் இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இவ்வருடம் நடைபெறவுள்ளன. இதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் கைலாசபதி கலையரங்கு புதுப்பொலிவுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி, முதுமாணி, பட்டப்பின் டிப்ளோமா, இளமாணி டிப்ளோமா ஆகிய பட்டங்கள் இந்தப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படவுள்ளன. 29.08.2007 ஆம் திகதிக்குப் பின்பும் 01.07.2009 ஆம் திகதிக்கு முன்பும் சித்தியடைந்தவர்கள் பட்டம் பெறத் தகுதியுடையவர்கள் என பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது.
கலாநிதி தேர்வு, முதுதத்துவமாணித் தேர்வு, கல்வியியல் முதுமாணித் தேர்வு, பிரதேச திட்டமிடல் முதுகலைமாணித் தேர்வு, குடித் தொகை அபிவிருத்தி முதுகலைமாணித் தேர்வு, அபிவிருத்தி கற்கைகள் முதுகலைமாணித் தேர்வு, அபிவிருத்தி முதுகலைமாணித் தேர்வு, பண் பாட்டியல் முதுகலைமாணித் தேர்வு, பொது நிர்வாக முதுகலைமாணித் தேர்வு, தமிழ் முதுகலைமாணித் தேர்வு, சைவசித்தாந்த முதுகலைமாணித் தேர்வு, பட்டப்பின் கல்வி டிப்ளோமா தேர்வு, பட்டப்பின் பொது நிர்வாக டிப்ளோமா, பட்டப்பின் நூலகவியல் டிப்ளோமாத் தேர்வு, வைத்தியமாணி, சத்திரசிகிச்சை மாணித் தேர்வு, தொழில் நிர்வாகமாணித் தேர்வு, வணிக மாணித் தேர்வு, விவசாய, விஞ்ஞான மாணித்தேர்வு, விஞ்ஞான மாணித் தேர்வு, கலை மாணித் தேர்வு, நுண்கலைமாணித் தேர்வு, சித்திரமும் வடிவமைப்பும்,விஞ்ஞான மாணி (பிரயோக கணிதமும் கணித்தலும் - வவுனியா வளாகம்), விஞ்ஞானமாணி (சுற்றாடல் விஞ்ஞானம் - வவுனியா வளாகம்), தொழில் நிர்வாக மாணி (முகாமைக்கற்கைகள் - வவுனியா வளாகம்), தொழில் நிர்வாக மாணி கணக்கியலும நிதியும் - வவுனியா வளாகம், விஞ்ஞான டிப்னோமா தேர்வு (2ஆம் வருடம்), உடற்கல்வி டிப்ளோமா தேர்வு – 2ஆம் வருடம்), மீன்பிடி விஞ்ஞான டிப்ளோமா தேர்வு – 2ஆம் வருடம் ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களே பட்டம் பெறத் தகதியுடையவர்கள் ஆவார்கள்.
தகுதியுடையவர்கள் இம்மாதம் 28 திகதிக்கு முதல் தமது வேண்டு கோள்களை அறிவுறுத்தலுக்கமைய சம்ர்ப்பிக்குமாறும், முடிவுத் திகதி பின்னர் கிடைக்கும் வேண்டுகோள்கள் எதுவும் ஏற்கப்படாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரிகள் தமது வேண்டுகோள் படிவத்தை ஏ - 4 தாளில் தயாரித்தோ அல்லது www.jfn.ac.lk என்ற இணையத்தளத்தில் இருந்தும் பதிவிலக்கம் மூலம் பிரதி செய்தோ விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கு உதவிப்பதிவாளர், அனுமதிகள் ,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எனும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும் எனப் பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’