வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 பிப்ரவரி, 2010

பாகிஸ்தானில் 2 சீக்கியர்கள் தலை துண்டித்துப் படுகொலை-தலிபான்கள் அட்டூழியம்


பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவரில் 2 சீக்கியர்கள் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டனர். தலிபான்கள் இந்த படுகொலையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த சீக்கியர்கள் 2 பேரும் கடந்த மாதம் தலிபான்களால் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள் ஆவர்.

2 பேரின் தலைகளையும் பெஷாவரில் உள்ள ஒரு குருத்வாராவில் கொண்டு வந்து தலிபான்கள் போட்டுச் சென்றுள்ளனர்.

தலிபான்களிடம் மேலும் பல சீக்கியர்கள் பிணைக் கைதிகளாக சிக்கியுள்ளாக தகவல்கள் கூறுகின்றன.

கைபர் பழங்குடியினப் பகுதியில் ஜஸ்பால் சிங் என்பவரின் தலை கண்டுபிடிக்கப்பட்டது. மஹால் சிங் என்பவரின் தலை அராக்சாய் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் இவர்கள் கடத்திச் செல்லப்பட்டு பிணைத் தொகை கேட்கப்பட்டது. அது கிடைக்காத ஆத்திரத்தில் மூன்று பேரையும் கொடூரமாகக் கொன்றுள்ளனர் தலிபான்கள்.

இதற்கிடையே மேலும் 4 சீக்கியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஒரு தகவலும், 6 பேர் கடத்தப்பட்டிருப்பதாக இன்னொரு தகவலும் கூறுகின்றன.

கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட 2 சீக்கியர்களையும் விடுவிக்க 3 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என தலிபான்கள் கெடு விதித்திருந்தனர் என்று கூறப்படுகிறது.

தற்போது தீவிரவாதிகள் வசம் குர்வீந்தர் சிங், குர்ஜித் சிங் ஆகியோர் பிடிபட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீக்கியர்கள் வசித்து வந்த பகுதி முற்றிலும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமாகும். இங்கு அரசின் கட்டுப்பாடு சுத்தமாக கிடையாது.

இப்பகுதியில், குறிப்பாக அரக்சாய் பகுதியில் ஏராளமான சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டு தோறும் மத வரி கட்ட வேண்டும் என தலிபான்கள் கட்டளையிட்டுள்ளனர். அதன்படி சீக்கியர்களும் வரி கட்டி வருகின்றனர். கட்ட முடியாதவர்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.

தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் சீக்கியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பிருந்தே இப்பகுதியில் காலம் காலமாக வசித்து வருபவர்கள் ஆவர். இந்தியப் பிரிவினைக்குப் பிறகும் இவர்கள் இடம் பெயராமல் இங்கேயே தொடர்ந்து வசித்து வருகின்றனர்.

இந்தியா கடும் கண்டனம்

சீக்கிய இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில், இது மிகவும் காட்டுமிராண்டித்தனமானது. இந்த படுகொலைகள் குறித்து வருகிற 25ம் தேதி நடைபெறும், இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படும்.

தனது நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம். இந்தப் பிரச்சினையை பாகிஸ்தான் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’