
தனது மகளை பலவந்தமாக வல்லுறவுக்கு உட்படுத்திய 16வயது இளைஞனின் வீட்டுக்குள் சென்ற தந்தை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞனை வாளினால் வெட்டி படுகாயத்துக்கு உள்ளாகிய சம்பவமொன்று கம்பஹா மாவட்டம் மீரிகமையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட இளைஙன் தன்னை வல்லுறவுக்கு உட்படு;தினார் என 14வயதான அவரது மகள் தந்தையிடம் முறையிட்டதும் கோபாவேசமடைந்த அந்த தந்தையார் குறித்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று அவரை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மீரிகம பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.விக்கிரமரத்னவின் தலைமையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’