வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 18 ஜனவரி, 2010

தமிழ்க் கூடட்மைப்பு(TNA) பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் துப்பாக்கிச்சூட்டில் காயம்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தனின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்றுபிற்பகல் 3.30மணியளவில் இடம்பெற்றதாக திருக்கோவில் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தனது இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது காலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தற்போது அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’