வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தவறான செயல்களினால் வடக்கு கிழக்கில் ஆளும் கட்சி தோல்வியடைந்தது: முரளிதரன்

பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தவறான செயற்பாடுகளினால் வடக்கு கிழக்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறைந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்ள நேர்ந்ததாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேச அரசியல்வாதி ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்த போதிலும், தமது ஆதரவாளர்களை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கும் முனைப்புக்களில் ஈடுபடுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போலியான வாக்குறுதிகளை அளித்து வடக்கு கிழக்கு மக்களை குறித்த அரசியல் தலைவர் ஏமாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முகஸ்துதிக்காக ஜனாதிபதியையும், பசில் ராஜபக்ஷவையும் பாராட்டிப் பேசிய குறித்த அரசியல் தலைவர், ஜெனரல் சரத் பொன்சேகாவின் பின்னால் சென்றதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கில் அதிக எண்ணிக்கையிலானோர் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிக்க வில்லை எனவும், அவர்கள் இப்போது வருந்துவதாகவும் முரளிதரன் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’