வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கடிதம்


தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் பணியாற்றும் ஊடகவியலாளர்களைக் கைது செய்தல் மற்றும் கட்டாயப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெற்றியாளராக பிரகடனம் செய்யப்பட்டு இரண்டு தினங்களின் பின்னரே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னரான இத்தகைய வன்முறை அலைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவி நிலை ஆரம்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையும் என்றும் எதிர்வரும் வருடங்களில் அரசியல் சூழ்நிலைக்கு கெடுதி விளைவிப்பதாகவும் இருக்கலாம் எனவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

அத்துடன் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பையும் மற்றும் ஈரான், டூனிஸியா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் தணிக்கை முறையையும் அதன் பிந்திய செயற்பாடான ஊடக சுதந்திர சுற்றிவளைப்பையும் அந்த அமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களின்போது ஊடக ஆதரவு தொடர்பில் விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் அறிக்கைகளை ஞாபகப்படுத்தியுள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, 2008 ஒக்டோபரில் அதன் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று குறித்தும் குறிப்பிட்டுள்ளது.

ஜனநாயக தேர்தல் ஒன்றின் போது அதற்கு முன்னரும் வேட்பாளர் ஒருவர் குறித்து செய்திகள் வெளியிடுவது தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களும் ஏனைய ஊடகவியலாளர்களும் வழமையாக மேற்கொள்ளும் நடைறைப் பணிகளாகும்.

ஆனால் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் அவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏற்பதற்கு இல்லை இவ்வாறு ஊடக சுதந்திர அமைப்பு மேலும் தெவித்துள்ளது.

பொலிஸாரும் இனம் காணப்படாத குழுவினரும் ஊடகங்களை இலக்கு வைத்துள்ளார்கள். விசேடமாக முன்னணி எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்த ஊடகங்கள் மீது அவர்களின் இலக்கு உள்ளது என்று தெரிவித்துள்ள இலங்கையின் ஐந்து பிரதான ஊடகவியலாளர்கள் அமைப்புகள், தேர்தலுக்குப் பின்னரான ஊடக அடக்குறை குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஊடக சுதந்திரத்திற்கு எதிரான பின்வரும் மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

1.ஜனவரி 26 ஆம்திகதி பிரசுக்கப்பட்ட கட்டுரையொன்று தொடர்பில் எதிர்க்கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணி ஆதரவிலான லங்கா பத்திகையின் ஆசியர் சந்தன சிறிமல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கென அழைக்கப்பட்ட போதே அவர் கைதுக்கு உள்ளாகியுள்ளார்.

2.சிவில் உடையணிந்த சிலர் அனுமதி பெற்ற இலக்கத் தகட்டுடனான காரில் வந்து நேற்று முன்தினம் மாலை லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலக நுழைவாயிலை சீல் வைத்துள்ளனர். அவர்கள் இதற்கு முன் அலுவலகத்தில் சோதனையும் நடத்தியுள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த இணையத்தளத்தை தன் வாடிக்கையாளர்களை பார்வையிடமுடியாதவாறு சிறிலங்கா ரெலிகொம் தடைசெய்துள்ளது.

3.கொழும்பை தளமாகக் கொண்ட டெயிலி மிரர் பத்திகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அமைச்சர் ஒருவர் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட செய்திப் பத்திரிகையான உதயன் மீது தெளிவாகக் குறிப்பிடப்படாத வகையில் தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

4.சுவீடன் அரச வானொலி நிலையத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கன் பென்கன் ஊடக அங்கீகாரம் மீள் பெறப்பட்டு பெப்ரவரி முதல் திகதி நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார்.

தேர்தல் காலத்தில் அறிக்கையிடுவதற்கான விசாவும் அங்கீகாரமும் நான் வைத்திருந்தேன் என்று அவர் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்புக்குக் கூறினார்.

5.தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் அதிகாரியொருவடம் நான் எழுப்பிய கேள்விகள் தொடர்பாகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆலோசகர் ஒருவர் அவரை அவமரியாதையாகக் குறிப்பிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

6.இலங்கை வானொலி ஒலிபரப்புச் சேவையைச் சேர்ந்த செய்தியாளர் ரவி அபேவிக்கிரம நேற்று முன்தினம் வானொலி நிலைய அதிகாரிகளில் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். நிலையத் தலைவரால் வெளியிடப்பட்ட தேர்தல் நிலைவரங்களை பாரபட்சமாக கையாண்டமை தொடர்பாக விமர்சித்ததையடுத்தே ரவி அபேவிக்கிரம தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

7.தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களான சிரச மற்றும் சுவர்ணவாஹினி நிலையங்கள் இரண்டினைச் சுற்றியும் உட்புறத்திலும் ஜனவரி 26 ஆம் திகதி இராணுவத்தினர் நிரப்பப்பட்டு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன.

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொள்ள முயன்ற வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் படப்பிடிப்பாளர்களிடம் இராணுவத்தினர் முரட்டுத் தனமாக நடந்து கொண்டுள்ளனர்.

கெமராவில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை அழித்து விடுவதற்கு ஒரு புகைப்படப் பிடிப்பாளர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். பொன்சேகாவினால் பாவிக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் முந்திய தினம் சுதந்திரமாக ஊடகவியலாளர்கள் செயற்படுவதையும் இராணுவத்தினர் தடுத்துள்ளனர்.

ஜனவரி 24 ஆம் திகதி முதல் காணாமற் போயுள்ள அரசியல் நிருபரும் கேலிச்சித்திரக்காரருமான பிரகீத் எக்னலிகொடவை தேடிக் கண்டறிய அதிகளவிலான பொலிஸ் அதிகாரிகளைப் பணியில் ஈடுபடுத்துமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு இறுதியாகக் கேட்டுக் கொண்டுள்ளது.

காணாமல் போயுள்ள பிரகீத் எக்னலிகொடவின் குடும்பத்தார் அவரைப் பற்றிய தகவல் எதுவுமின்றி கடந்த ஒருவாரமாக பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெற்றியாளராக பிரகடனம் செய்யப்பட்டு இரண்டு தினங்களின் பின்னரே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னரான இத்தகைய வன்முறை அலைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவி நிலை ஆரம்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையும் என்றும் எதிர்வரும் வருடங்களில் அரசியல் சூழ்நிலைக்கு கெடுதி விளைவிப்பதாகவும் இருக்கலாம் எனவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

அத்துடன் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பையும் மற்றும் ஈரான், டூனிஸியா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் தணிக்கை முறையையும் அதன் பிந்திய செயற்பாடான ஊடக சுதந்திர சுற்றிவளைப்பையும் அந்த அமைப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களின்போது ஊடக ஆதரவு தொடர்பில் விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் அறிக்கைகளை ஞாபகப்படுத்தியுள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, 2008 ஒக்டோபரில் அதன் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று குறித்தும் குறிப்பிட்டுள்ளது.

ஜனநாயக தேர்தல் ஒன்றின் போது அதற்கு முன்னரும் வேட்பாளர் ஒருவர் குறித்து செய்திகள் வெளியிடுவது தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களும் ஏனைய ஊடகவியலாளர்களும் வழமையாக மேற்கொள்ளும் நடைமுறைப் பணிகளாகும்.

ஆனால் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் அவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஏற்பதற்கு இல்லை இவ்வாறு ஊடக சுதந்திர அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’