-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
ஞாயிறு, 3 ஜனவரி, 2010
ஜனாதிபதி தேர்தல் குறித்து த.தே.கூ. நாளை மீண்டும் சந்திப்பு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுப்பதில் நெருக்கடிகளை எதிர் நோக்கியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை மீண்டும் கொழும்பில் கூடி எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து ஆராயவிருக்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள போதிலும் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என தெரிய வருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ,ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோருக்கும் ,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையில் சந்திப்புகள் இடம்பெற்ற பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை கூடவிருக்கின்றது.
நாளைய கூட்டத்தில் இச்சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதோடு இது பற்றி தலைவர் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிய வருகின்றது.
மேலும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக எம்.கே.சிவாஜிலிங்கம் (டெலோ) கட்சியின் தீர்மானத்தை மீறி போட்டியிடுவது, தேர்தல் பகிஷ்கரிப்பு என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் ஆட்சி மாற்றத்திற்காக பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவிருக்கின்றது.
இருப்பினும் நளைய கூட்டத்திலும் இத்தேர்தல் தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்கக் கூடிய வாயப்புகள் இருக்காது போல் தெரிகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரொருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இதே வேளை தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இத்தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும் ,அவருக்கு எதிராக தமது கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க முடியாதிருப்பது குறித்து டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனிப்பட்ட ரீதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தரை சந்தித்து தெளிவு படுத்தியதாகவும் தெரிய வருகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’