வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

நிரந்தர நியமனம் பெற்றுக்கொண்ட யாழ். ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு திரண்டு வந்து கௌரவமளித்தனர்.

தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத் தந்தமைக்காக யாழ். மாவட்ட ஆசிரியர் உதவியாளர் சங்க அங்கத்தவர்கள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு திரண்டு சென்று கௌரவமளித்தனர்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்றையதினம் பகல் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ். மாவட்டத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமைபுரிந்தவர்கள் கடற்றொழில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் பகுதிநேர ஆங்கில ஆசிரியர்கள் என 414 பேர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பெருமுயற்சியால் ஆசிரிய உதவியாளர்களாக நிரந்தர நியமனம் பெற்றுக்கொண்டமைக்கு அமைச்சர் அவர்களுக்கு கௌரவமளித்து தமது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

யாழ். மாவட்ட தொண்டராசியர் சங்கத்தின் நீண்டகால தலைவராக இருந்த சிவகாந்தன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மேளதாள மங்கல வாத்தியங்களோடு மலர்மாலை அணிவித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்கப்பட்டதுடன் நிகழ்வின்போது அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துப்பா மாலையும் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஆசிரிய உதவியாளர் சங்க தலைவர் செயலாளர் ஆகியோர் பல்லாண்டு காலம் நீடித்த தமது நிரந்தர நியமன கோரிக்கையினை பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தமக்கு பெற்றுத்தந்து தமது குடும்பத்திலும் வாழ்விலும் விளக்கேற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நியமனம் பெற்றுக்கொண்ட அனைவர் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமனம் பெற்றுக்கொண்டவர்கள் தமக்கும் தமது தோழர்களுக்கும் அளித்த பெருவரவேற்பு மற்றும் பாராட்டு என்பன தம்மை நெகிழ வைப்பதாக தெரிவித்ததுடன் சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்லுவோம் என்ற தமது கொள்கைப்படி தாம் ஆசிரிய நியமனத்தை பெற்றுக்கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

இன்றைய பாராட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் யாழ். மாநகரமுதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் உதயன் ஈபிடிபியின் சர்வதேச அமைப்பாளர் மித்திரன் உள்ளிட்ட ஆசிரிய நியமனம் பெற்றுக்கொண்ட பெருமளவிலானோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’