
மட்டக்களப்பு மாநகர முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் முன்னைநாள் உறுப்பினரும், பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டுள்ள மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சோகவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுரத் பொன்சேகாவிடம் சிவகீதா பிரபாகரன் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவற்றில் அவரதும் குடும்பத்தினரின் பாதுகாப்பு என பலவற்றை முன்வைத்துள்ளதாகவும் அவற்றில் கணிசமானவற்றை சரத் பொன்சேகா ஏற்று கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இது குறித்த ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது பேச்சு நடாத்தியுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளபோதும், தேர்தலில்; ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளார என்பது குறித்து கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. இது குறித்த மாநகர முதல்வரின் கருத்தினை பெறமுயன்றபோதும் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’