-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 25 ஜனவரி, 2010
குமரன் பத்மநாதன் விசும்பாவயில் வைக்கப்பட்டு, அவருடன் அரச தரப்பினர் விருந்து உண்கின்றனர்: ரணில்
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது, வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்திய கே பி எனப்படும் குமரன் பத்மநாதனை விசும்பாயவில் வைத்துள்ளதாகவும், அவருடன் அரசதரப்பினர் ஒன்றாக இருந்து மது அருந்தி விருந்துண்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களை படையினர் சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தியுள்ள குமரன் பத்மநாதன் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது எனவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
படைத்தரப்பு காவலில் உள்ள கே பி தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரக்கால சட்டத்தின் கீழ் காவலில் உள்ள கே பியிடம் அரசாங்கம், விசாரணைகளை நடத்தமுடியும். பதிலாக அவர்கள் கே பியை விசும்பாயவில் வைத்துள்ளதாகவும் அவருடன் ஒன்றாக இருந்து மது அருந்துவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் வெள்ளைக்கொடிகளை ஏந்திவந்தார்கள் எனக்கூறிய இரண்டாவது மனிதர்தான் வெளியுறவுத்துறையின் முன்னாள் செயலாளர் பாலித கோஹன.
அவரிடமும் இது தொடர்பாக விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ளலாம் என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, வெள்ளைக்கொடிகளை ஏந்தி வந்தவர்கள், சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னர் பிரபாகரனை போல மரண விசாரணைகளை நடத்தியிருக்கலாம். ஆனால் அது இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’