வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 ஜனவரி, 2010

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து த.தே.கூ மன்னாரில் பிரசாரக் கூட்டம்


ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இப்பிரசாரக் கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான நூர்தீன் மசூர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சூசைதாசன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்ட அனைத்து முக்கியஸ்தர்களும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் ஒவ்வொருவரும் பொன்சேகாவுக்கு தமது ஆதரவினை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற இப்பிரசாரக் கூட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’