வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 ஜனவரி, 2010

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழல் அற்றுப்போயுள்ளது . பதவியில் நீடித்திருப்பதில் பயனில்லை என்கிறார் ஆணையாளர்


எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலாக நடத்துவதற்கு ஏற்ற சூழல் அற்றுப்போயுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்ததும் தொடர்ந்தும் இப்பதவியில் நீடித்திருப்பதற்கு விரும்பவில்லை. எனவே, எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை ஒப்படைத்துவிடுவதற்கும் அதன் பிறகு தேர்தல்கள் செயலகத்துக்கு சமூகமளிப்பதை தவிர்த்துக்கொள்வதற்கும் தீர்மானித்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச ஊடகங்களை கண்காணிப்பதற்கென நியமிக்கப்பட்டிருந்த சுயாதீன அதிகாரியையும் அவரது பதவியிலிருந்து விலக்கிக்கொள்வதாகவும் இந்த தீர்மானம் திங்கட்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் தேர்தல்கள் ஆணையாளர்களுடனான கட்சி செயலாளர்களின் சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்றது. இதன்போதே தேர்தல்கள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதினத்திலிருந்து தொடர்ந்தும் வன்முறை சம்பவங்கள், தேர்தல் விதிமுறைகளை மீறுகின்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும் இது தொடர்பில் தனது யோசனைகள் கவனத்தில் கொள்ளப்படாதிருப்பதையும் கட்சி செயலாளர்களுக்கு சுட்டிக்காட்டிய ஆணையாளர், தான் தொடர்ந்தும் இப்பதவியில் நீடித்திருப்பது பயனற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடைபெறவிருக்கின்ற தேர்தல் சுயாதீனமான தேர்தலாகவும் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய தேர்தலாகவும் அமையப்பெறுமா என்பது தொடர்பில் தன்னால் எதுவும் கூற முடியாதிருப்பதாகவும் இதன்போது செயலாளர்களின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

>b> திஸ்ஸ அத்தநாயக்க >/b> சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில், தேர்தல்கள் ஆணையாளருடனான இன்றைய சந்திப்பின்போது மிகவும் கவலைக்கிடமாகன தகவல்களே கிடைக்கப்பெற்றன.

அரச ஊடங்களை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட சுயாதீன அதிகாரியை விலக்கிக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். அத்துடன், அரசியலமைப்புக்கு அமைவாக தேர்தல்கள் ஆணையாளருக்கு இருக்கின்ற அதிகாரங்களின் பிரகாரம் அரச ஊடகங்களில் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அவரால் அதிகாரியொருவரை நியமிக்க முடியும். அவ்வாறு நியமிக்கப்பட்டிருந்த அதிகாரியின் அறிவுறுத்தல்கள் கடைப்பிடிக்கப்படாமையாலும் அவரது செயற்பாடுகளுக்கு அரச ஊடகங்கள் தகுந்த ஒத்துழைப்புகளை வழங்காமையினாலும் குறித்த அதிகாரியை ö தாடர்ந்தும் அப்பதவியில் ஈடுபடுத்துவது பொருத்தமற்றது என்பதனால் அவரை குறித்த பதவியிலிருந்து விலக்கிக்கொள்வதாக அவர் எமககு அறிவித்தார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பில் விசேட தெளிவுபடுத்தல் ஒன்றை வெளியிடயிருப்பதாகவும் அத்துடன் இந்த தேர்தலின் பின்னர் தான் தொடர்ந்தும் அப்பதவியில் இருப்பதற்கு விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

>b> அனுர குமார >/b> ஜே.வி.பி.யின் சார்பில் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அக்கட்சி“யின் பாராளுமன்ற குழு தலைவரும் குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான அனுரகுமார திஸாநாயக்க கூறுகையில்,

அரச ஊடகங்கள் மேற்படி சுயாதீன அதிகாரியின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க செயற்படாதன் காரணமாக அவரை அப்பதவியிலிருந்து விலக்கிக்கொள்வதாக தெரிவித்துள்ள ஆணையாளர் தயானந்த திஸநாயக்க, ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்ததும் தனக்கு இருக்கும் பொறுப்புகளையும் அது தொடர்பான ஆவணங்களையும் கையளித்துவிட்டு மீண்டும் தேர்தல்கள் திணைக்களத்தில் காலடிவைப்பதில்லை என்பதையும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் என்றார்.

சுசில் பிரேம் ஜயந்த அரசாங்கத்தின் சார்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த கூறுகையில்,

நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் அது தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் நாம் பலதரப்பட்ட யோசனைகளை எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளோம். இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல்கள் ஆணையாளரும் பொலிஸ் மா அதிபரும் நீதியான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

சுயாதீன அதிகாரி தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கு சகல அதிகாரங்களும் உள்ளன. அந்த அடிப்படையில் தான் குறித்த அதிகாரி விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளõர்., அவ்விடயத்தில் தலையிடுவதற்கு எனக்கு அதிகாரமில்லை என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’