இன்று (22) முற்பகல் யாழ். முனியப்பர் கோவில் முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மும்மதத் தலைவர்களும் ஆசியுரை வழங்க வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் 87 கிலோமீற்றர் நீளமான இந்த வீதியைப் புனரமைப்பதற்கு சீன அரசாங்கத்தின் உதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெற்றுக் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இங்குள்ள அதிகாரிகளும் பொதுமக்களினதும் ஒத்துழைப்புடன் நாட்டின் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இது போன்ற மேலும் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் தமிழ் பேசும் மக்களுக்காக இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் பெறறுத் தந்த அரசிற்கும் அதேவேளை உதவிகளை வழங்கிய சீன அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வீதி அபிவிருத்தி வேலைகளில் உள்ளுர் ஒப்பந்தகாரர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதற்குத் தமது ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும் எனத் தெரிவித்ததுடன் அரசாங்கம் பல இழப்புகளின் மத்தியிலும் நாட்டின் வன்முறைக்கு நிரந்தரத் தீர்வு கண்டுள்ளதாகவும் அதன் பொருட்டு ஜனாதிபதியின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்குத் தமிழ் மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுபியான் சீன ரயில்வே அதிகாரியான பூசியுங் சோங் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.மரியதாசன் யாழ்.மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியிலாளர் திரு.சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
![]() ![]() ![]() ![]() ![]() |


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’