-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 25 ஜனவரி, 2010
யாழ்.மாவட்டத்தில் 72.9 வீதமான வாக்காளர் அட்டைகளே விநியோகிக்கப்பட்டுள்ளது:யாழ்.அரச அதிபர்
யாழ்.மாவட்டத்தில் 72.9 வீதமான வாக்காளர் அட்டைகளே இதுவரையிலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான கே.கணேஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்.செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே யாழ்.அரச அதிபர் இத்தகவலைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத் தெர்தல் தொகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 இலட்சத்து 30 ஆயிரத்து 548 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 90 ஆயிரத்து 811 வாக்காளர்களும் உள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் 529 வாக்களிப்பு நிலையங்களும், கிளிநொச்சியில் 95 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலாக இரு மாவட்டங்களிலும் மொத்தமாக 76 கொத்தணி வாக்களிப்பு நிலைங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
26 ஆம் திகதி காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம். யாழ்ப்பாண மாவட்டத்தில் 72.9 வீதமான வாக்களார் அட்டைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 10.82 வீதமான வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமைக்குக் காரணம் அவர்களில் பலர் வவுனியாவில் உள்ளமையால் ஆகும்.தபால் மூல வாக்களிப்பில் 5 ஆயிரத்து 795 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, 4 ஆயிரத்து 737 வாக்குகள் நேற்று வரை ஏற்கப்பட்டுள்ளன.
மிகுதி 26 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முதல் வந்து சேரும். இம்முறை தேர்தலில் இடம்பெயர்ந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளவர்களுக்காக தெல்லிப்பளை நலன்புரி நிலையம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கைதடி பனை அபிவிருத்திச் சபை நலன்புரி நிலையம் ஆகிய மூன்று நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனைவிட யாழ்.மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள தேர்தல் ஆணையாளருக்கு விண்ணப்பித்த 15 ஆயிரத்து 597 விண்ணப்பதாரிகள் அந்தந்த மாவட்டங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிப்பு நிலைய அபேட்சகர்கள், தேர்தல் முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், வாக்களிப்பு நிலைய பிரிவு முகவர்கள், சர்வதேச பார்வையாளர்கள், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர், மேற்பார்வையாளர்கள் போன்றோர் செல்லலாம்.
11 தேர்தல் தொகுதிகளுக்கு தலா 2 வாக்கெண்ணும் நிலையங்கள் அடிப்படையில் 22 வாக்கெண்ணும் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனைவிட தபால் மூல வாக்குகளை கணக்கிடுவதற்காகவும், இடம்பெயர்தோர் வாக்குகளை எண்ணுவதற்காகவும் மேலும் இரண்டு வாக்கு எணணும் நிலையங்கள் அமைக்கப்பட்டு மொத்தமாக 24 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எண்ணப்பட்ட வாக்குகளை உத்தியோகபூர்வமாக வெளியிடும் மையமாக மாவட்டச் செயலகம் செயற்படும். இம்முறை தேர்தல் பணிகளுக்காக 6 ஆயிரத்து 375 உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்திற்காக 352 வாகனங்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன. தேர்தல் கடமைகளுக்கு முற்று முழதாக பொலிஸார் பயன்படுத்தப்படுவார்கள், தேவைப்பட்டால் மாத்திரம் பொலிஸார் ஊடாக இராணுவத்தினர் பயன்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’