
12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம்செய்ய முயன்ற 26வயதானவர் கைது செய்யப்பட்டதுடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. பண்டாரகம பொலிசாருக்கு கிடைத்த தகவல்படி இளைஞருக்கும் சிறுமிக்கும் திருமணம் நடக்கவிருந்த தருணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தமாதம் 19ம்திகதி சிறுமியின் தாயார் பண்டாரகம நகரம் சென்றிருந்த போது சிறுமி பக்கத்து கடையில் ஜஸ்பெக்கட் வாங்கச் சென்றதாகவும், அச்சமயம் குறித்த இளைஞர் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பண்டாரகம விலாச்சியப் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு பத்துநாட்கள் தங்கியிருந்ததாகவும் தெரிய வருகிறது. பின்னர் சிறுமியை இளைஞர் தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்வதற்கு பெற்றோரிடம் சம்மதம் பெற்று திருமண ஏற்பாட்டை செய்து கொண்டிருந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி தன்னைச் சந்திக்குமாறு இளைஞர் சிறுமிக்கு எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சிறுமி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைகள் தொடர்கின்றன.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’