வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 டிசம்பர், 2009

வடகொரிய ஆயுத விமானம் இலங்கையை நோக்கியே பயணித்தது : தாய்லாந்து பொலிஸார்

வடகொரியாவில் இருந்து ஆயுதங்களுடன் கடந்த வாரம் புறப்பட்ட விமானம் இறுதியாக இலங்கையை நோக்கியே சென்றதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தாய்லாந்தில் தரித்த போது அதில் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த விமானம் தடுத்து வைக்கப்பட்டதுடன், அதில் பயணித்த ஐந்து விமானிகளும் கைது செய்யப்பட்டனர். எனினும் இந்த விமானிகள், தமக்கும் சர்வதேச ஆயுதக்கடத்தல்காரர் விக்டர் பௌட்டுக்கும் தொடர்புகள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

விக்டர் பௌட்டும் குறித்த விமானிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நால்வர் கஸகஸ்தானையும் ஒருவர் பெலாரஸ்ஸையும் சேர்ந்தவர்களாவர். இதேவேளை, இந்த விமானம் ஈரானை நோக்கி சென்றதாக கூறப்பட்ட தகவலில் உண்மையில்லை என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆயுத கடத்தல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, குறித்த விமானம், ஈரானின் தெஹ்ரான், பாங்கொக், மற்றும் கொழும்பு, அஸர்பஜான்,உக்ரெய்ன் ஆகிய இடங்களில் தரித்து செல்ல வாய்ப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது..


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’