வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 டிசம்பர், 2009

ஜனநாயகத்தைச் சீரழிக்க இடமில்லையென்கிறார் ஜனாதிபதி


நாட்டின் ஜனநாயகத்தை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடம் இணைந்த ஒரு தொகுதியினருடன் நேற்று பிற்பகலில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் தாம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதால் அச்சமின்றி எந்த ஒரு பகுதிக்கும் செல்ல முடிவதாகக் கூறினார்.

மக்கள் தம்மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர் அந்த நம்பிக்கையை மீறும் வகையில் செயற்படப் போவதில்லையெனவும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’