வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 டிசம்பர், 2009

இடம்பெயர்ந்தவர்களிடம் முச்சக்கரவண்டி சாரதிகள் அபகரிப்பு


வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து தங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்லும் மக்களிடம் இருந்து முச்சக்கர வண்டி சாரதிகள் பயணக் கட்டணம் எனக் கூறி பெருந்தொகைப் பணத்தை அபகரித்து வருகின்றனர் எனத் தெரிய வருகிறது.

வவுனியா நகரிலிருந்து ஓமந்தைப் பகுதிக்கு 20 ரூபா பஸ் கட்டணமாக அறவிடப்படுகின்ற நிலையில் முச்சக்கர வண்டி சாரதிகள் 1000 ரூபா முதல் 1500 ரூபா வரையில் கட்டணமாக அறவிடுகின்றனர் என்றும் 40 ரூபா பஸ் கட்டணத் தூரத்தைக் கொண்ட செட்டிக்குளம் பகுதிக்குச் செல்ல 3000 ரூபா முதல் 3500 ரூபா வரையில் முச்சக்கர வண்டிகளுக்கென கட்டணம் அறவிடப்படுவதாகவும் தெரியவருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’