வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

குடாநாட்டில் செயற்படும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுனான மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரின் தலைமையில் யாழ். குடாநாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான மீளாய்வுக் கூட்டம் இன்று மாலை இடம்பெற்றது.

யாழ். செயலகத்தில் யாழ். அரசாங்க அதிபரின் நிகழ்ச்சித்திட்ட உரையுடன் ஆரம்பமாகிய இக்கூட்டத்தில் குடாநாட்டில் செயற்படும் அனைத்து ஐ.நா. மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது. அனைத்து நிறுவனங்களும் இவ்வருடத்தில் மேற்கொண்ட பணிகள் மற்றும் திட்டங்கள் என்பன தனித்தனியாக ஆராயப்பட்டதுடன் எதிர்வரும் வருடத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள செயற்றிட்டங்களும் அங்கு சமர்ப்பிக்கப்பட்டன. குறிப்பாக நடந்து முடிந்த யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் கூடிய கவனமெடுக்கும் படியாக வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில் அவை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

மீளக்குடிமர்த்தப்பட்ட சுமார் 24 ஆயிரம் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்குடன் குடும்பத்திற்கு தலா ஒவ்வொரு துவிச்சக்கர வண்டிகள் வீதம் வழங்கவும் திட்டமிடப்பட்டதுடன் அதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பும் கோரப்பட்டது. அத்துடன் மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மற்றும் ஜீவனோபாய தொழிலை முன்கொண்டு செல்லும் முகமாகவும் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளக் கூடிய செயற்றிட்டங்களை இந்நிகழ்வில் பங்குகொண்ட நிறுவன பிரதிநிதிகள் தனித்தனியாக முன்வைத்தனர்.

சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அவை தொடர்பான முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராய எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் ஒரு சந்திப்பினை மேற்கொள்வது என்ற முடிவுடன் இக்கூட்டம் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’