வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 டிசம்பர், 2009

கட்டாரில் மரணமான இலங்கையரின் இதயம் திருட்டு.

கட்டாரில் வேலைக்குச் சென்ற இலங்கையர் ஒருவரின் இதயம் களவாடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையைச் சேர்ந்த 35 வயதுடைய கருணரட்ன என்பவர் கட்டாரில் பணியாற்றி வந்தவர். கடும் சுகவீனம் காரணமாக கடந்த மாதம், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த அவரது சடலத்தை இலங்கையில் உள்ள குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இவரது மரணம் தொடர்பில் சந்தேகமடைந்த உறவினர்களின் முறைப்பாட்டினடிப்படையில் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பிரேத பரிசோதனையின் போது, இறந்தவரது சடலத்தில் இதயம் இல்லாது போயிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையின் முடிவின்படி, தற்போது கட்டாரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்டுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’