வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 டிசம்பர், 2009

பாகிஸ்தானில் மீண்டும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: அறுவர் பலி (


பாகிஸ்தான் பெஷாவர் நகரில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட அறுவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆகக் குறைந்தது 36 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முச்சக்கர வண்டியில் வந்த தற்கொலை குண்டுதாரியே குண்டை வெடிக்கவைத்தாக சம்பவத்தை நேரில் கண்டோர் சாட்சியமளித்துள்ளனர். சுமார் 6 கிலோகிராம் எடையுள்ள வெடிபொருட்களை வெடிக்கவைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டி நகரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டு 75 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 17 பேர் சிறுவர்களாவர். இந்தத் தாக்குதலுக்கு தலீபான் இயக்கம் உரிமைகோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’