
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோரின் தடுப்பு முகாம்களுக்குச் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இத்தகவலை அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ளார்.
தனிப்பட்ட ஊடகவியலாளர்கள் அனுமதி கோரினால் அவர்களுக்குத் தடுப்பு முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகம, தடுப்பு முகாம்களுக்குள் ஊடகவியலாளர் செல்ல கட்டுப்பாடுகள் எவையும் இல்லை எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’