
இத்தாலி நாட்டின் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி(73). அவரது சொந்த ஊரில், அவரது கட்சிப் பேரணி நடந்தது. இப்பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
பேரணியின் போது பொதுமக்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு வாலிபர் பிரதமரின் முகத்தில் உலோகத்தால் ஆன சிலையால் ஓங்கி அடித்தார். இதனால் அவரது வாய் மற்றும் மூக்கில் இரத்தம் கொட்டியது. பிரதமரது 2 பற்கள் உடைந்து விழுந்தன.
பிரதமருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாலிபரைப் பொலிசார் கைது செய்தனர். அவர் மனநோயாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’