வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 டிசம்பர், 2009

ஏ9 நெடுஞ்சாலை வழியாக பஸ் பயணத்தில் ஈடுபடும் பயணிகளின் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாக கண்டறிந்தார்.

யாழிலிருந்து ஏ9 தரைப்பாதை ஊடாக வவுனியாவிற்கும் நாட்டின் தென்பகுதிக்கும் பிரயாணம் மேற்கொள்ளும் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரயாணம் ஆரம்பமாகும் இடத்திற்கு இன்றையதினம் நேரடியாக விஜயம் செய்தார்.

இன்று அதிகாலை யாழ். புகையிரத நிலையப்பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சென்றபோது கடும் மழை பொழிந்துகொண்டிருந்தது. கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது அவ்விடத்திற்கு சென்ற அமைச்சர் தேவானந்தா அவர்கள் அங்கு பயணம் மேற்கொள்ளவிருந்தவர்களையும் அவர்களை வழியனுப்ப வந்தவர்களுமாக பல நூற்றுக் கணக்கானோரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பயணிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சரவர்கள் அப்பிரச்சினைகளை தீர்க்குமுகமாக பிரதேச பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிரதி பொது முகாமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதுடன் விரைவிலேயே பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் என உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’