2009ம் ஆண்டினை தகவல் தொழில்நுட்ப ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ள ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வகுப்பு ஒன்று தொடக்கம் வகுப்பு 5ம் வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் லப்ரோப் கணனிகளை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த திங்கள்கிழமை ஹொமகம மாவட்டத்தின் ஜலாத்தர மகாவித்தியாலயத்தின் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹொமகம கல்வி வட்டாரத்தில் உள்ள ஆறு பாடசாலைகளிற்கு புதிய கணனி ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்த ஆண்டு தகவல் தொழில்நுட்பதுறை ஆண்டாக ஜனாதிபதி பிரகடனம் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளதுடன், மாணவர்களிடையே கணனி அறிவை விருத்தி செய்யும் நோக்குடனேயே தகவல் தொழில்நுட்ப துறை ஆண்டாக 2009ம் ஆண்டை ஜனாதிபதி பிரகடனம் செய்துள்ளார்.
வடக்கே 37 பாடசாலைகளில் கணனி ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், அடுத்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணனிகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ் வைபவம் எதிர்வரும் 10ம் திகதி முதல் ஆரம்பித்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’