வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 நவம்பர், 2009

நாம் கடுமையாகத் தாக்கப்பட்டோம் : தமிழ்க் கைதிகள்


கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் அதிகாரிகளாலும் ஏனைய கைதிகளாலும் தாம் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தமிழ்க் கைதிகள் கூறியுள்ளனர்.

சிறைச்சாலை தமிழ்க் கைதிகள் இது தொடர்பான உண்மை நிலையை விபரிக்க சந்தர்ப்பம் வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெகசின் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன அங்கு சென்ற போது, தமது நிலைப்பாட்டை தமிழ்க் கைதிகள் மிகவும் கவலையுடன் கூறியதாக அவர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு அறிவித்துவிட்டு, உடனடியாக மெகசின் சிறைச்சாலைக்கு சென்று பாதிக்கப்பட்ட கைதிகளுடன் உரையாடினேன். கழுத்து, வயிற்றுப் பகுதிகள் கடுமையாக தாக்குதலுள்குள்ளான 5 பேர் மிகவும் பரிதாபகரமான முறையில் என்னிடம் நடந்த சம்பவத்தைக் கூறி முறையிட்டனர்.

இன வித்தியாசம் பார்த்து தமிழ்க் கைதிகள் தாக்கப்படுவதைப் பொறுப்புள்ள அமைச்சு தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாகும். அவர்களுக்கு நடந்த சம்பவத்தை வெளிப்படையாகக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை ஆணையாளரிடம் கேட்டுள்ளேன்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’