உடுவில் கந்தரோடை சங்குவேலி ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் சமூகமளித்திருந்தனர். இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த காலங்களில் போராட்டம் என்னும் பெயரால் எங்களை நாங்களே அழித்துக்கொண்டோமே தவிர இந்த அழிவுகளுக்கு இலங்கைப் படையினரையோ அல்லது இந்தியப் படையினரையோ காரணம் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்துடன் தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்திருக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூகமான தீர்வுகளைக் காண்பதுடன் அழிந்துபோன எம் தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவற்றையெல்லாம் கடந்த காலத் தமிழ் தலைமைகள் உதாசீனம் செய்ததன் விளைவுதான் எமது மக்கள் இத்தனை அவலங்களுக்கு முகம் கொடுத்தற்கு காரணமாக அமைந்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டினார்.
எமது மக்களின் விடிவிற்காக உழைப்பதற்கு ஓரணியில் தமிழ்பேசும் மக்களை அணிதிரளுமாறு வேண்டிக்கொள்வதுடன் அடுத்த ஆண்டை அரசாங்கம் தேர்தல் ஆண்டாக அறிவித்துள்ளதால் மிகுந்த விலைகொடுத்து நீங்கள் பெற்றுக்கொண்ட இந்த அமைதியான சூழலை பாதுகாத்து வளமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும் எனவும் அதற்காக பல படிகளை கடக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்ததுடன் எம் அனைவரது கடின உழைப்பின் மூலமே நாம் கடந்த காலத்தில் இழந்தவற்றையெல்லாம் மீளவும் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் உட்பட மேலும் பலர் தமது கருத்துக்களை முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’