வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 நவம்பர், 2009

அம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

அம்பாந்தோட்டை மாவட்டம் சூரியவௌ பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்பிரதேசத்திற்கு வந்த ஆயுததாரிகள் குறித்த நபர்மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றிருப்பதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அகங்கம பகுதியைச் சேர்ந்த 28வயதுடையவர் என்றும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சூரியவௌ பொலீசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்விதமிருக்க தொம்பே பகுதியில் நேற்றுமாலை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’