வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 நவம்பர், 2009

ஈழப் பெண்ணை மணக்கும் தருண் கோபி

திமிரு படப் புகழ் இயக்குநர் தருண் கோபி ஈழத்துப் பெண்ணை மணக்கிறார்.

திமிரு படம் மூலம் இயக்குநரானவர் தருண் கோபி. மதுரைக்காரர். சிம்பு நடித்த காளைப் படத்தையும் இயக்கியுள்ளார். மாயாண்டி குடும்பத்தார் என்ற தமிழ் கலாச்சாரத்தைப் பின்பற்றி எடுக்கப்பட்ட குடும்பப் பாங்கான படத்தில் நடிகராகவும் தன்னை வெற்றியாளராக நிலை நிறுத்தியவர் தருண் கோபி.

தற்போது காட்டுப்பய, ஜீவா பூங்கா, என்னை ஏதோ செய்து விட்டாய் ஆகிய படங்களில் ஹீரோவாக அசத்திக் கொண்டிருக்கிறார்.

தற்போது தருண் கோபிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணப்பெண் ஜானு லிங்கேஸ்வரி ஈழத்தைச் சேர்ந்தவர். தற்போது மதுரை ஜெய்ஹிந்து புரத்தில் வசித்து வருகிறார்.

இவர்களது திருமணம் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி, பொங்கல் நாளன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’