வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 நவம்பர், 2009

யோகர் சுவாமி ஞாபகார்த்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்!

யாழ். கொழும்புத்துறை இலந்தைக்குளம் வீதியிலுள்ள யோகர் சுவாமி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் பிரதம அதிதியாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.

இன்று யோகர் சுவாமி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். அமைச்சர் யோகர் சுவாமிகளின் சமாதிக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற யோகர் சுவாமி ஞாபகார்த்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த யோகர் சுவாமிகளின் படத்திற்கு மாலை அணிவித்து கௌரவித்ததுடன் இன்றைய நிகழ்வின் ஞாபகார்த்தமாக மரம் ஒன்றினை நாட்டி வைத்தார்.

இந் நிகழ்வில் மாநகரசபை முதல்வர் பிரதி முதல்வர் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’