வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 அக்டோபர், 2009

வவுனியாவிலிருந்து இறுதித் தொகையினர் மட்டு. வருகை


வவுனியா இடைத் தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களில் இறுதித் தொகுதியினர் இன்று அதிகாலை மட்டக்களப்பை வந்து சேர்ந்தனர்.

298 குடும்பங்களைச் சேர்ந்த 785 பேர் இறுதித் தொகுதியினாராக மீள் குடியேற்றத்தின் நிமித்தம் இராணுவத்தினரால் அழைத்து வரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

சிங்கள மகாவித்தியாலயத்திற்கு நேரடியாக அழைத்து வரப்பட்ட இக்குடும்பங்களின் விபரங்கள் பொலிஸ், இராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளினால் பதிவு செய்யப்பட்ட பின்னர் நேரடியாக அவர்களது இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் தகவல்களின்படி இன்று சகல குடும்பங்களும் அவர்களது இருப்பிடங்களைச் சென்றடைந்து விடுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து 4 தொகுதிகளில் இதுவரை 847 குடும்பங்களைச் சேர்ந்த 2349 பேர் மட்டக்களப்புக்கு மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களில் ஒரு தொகுதியினரும் மீள் குடியேற்றத்திற்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’