வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 அக்டோபர், 2009

வேம்படியில் இலவச பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம் : கல்வி அமைச்சு தீர்மானம்


- பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த வருட இலவச பாடநூல் விநியோக ஆரம்ப வைபவத்தை யாழ். வேம்படி மகளிர் மகா வித்தியாலயத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரதி கல்வி அமைச்சரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று காணப்படுகின்ற அமைதியான சூழல் காரணமாக ஏறக்குறைய 28 ஆண்டுகளின் பின் ஏ-9 ஊடாக மாணவர்களுக்கான இலவச பாடநூல்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாகப் பாரிய போக்குவரத்துச் செலவுடன் யாழ்ப்பாணத்துக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

நாட்டில் சுமுகநிலை காணப்படுவதையடுத்து, குறைந்த செலவில் ஏ-9 வீதி வழியாகப் பாடப் புத்தகங்கள் குடா நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’