
இந்தியப் பெருங்கடலில், ஏடன் வளைகுடா அருகே சென்ற சிங்கப்பூர் கப்பலை, சோமாலிய கடல்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்த கப்பலில் இருந்த இரண்டு இந்தியர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.
சோமாலியா நாட்டில் நிரந்தர அரசு ஏதும் இல்லை. வன்முறையாளர்கள் ஒவ்வொரு குழுவாக செயல்பட்டு ஒவ்வொரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர். இந்த வன்முறையாளர்களில் சிலர் கடல் கொள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் சர்வதேச கப்பல்களைத் துப்பாக்கி முனையில் நிறுத்தி கடத்திச் செல்வதும், கணிசமான பிணைத் தொகையைப் பெற்றுக் கொண்டு கப்பலை விடுவிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த ஆண்டில் மட்டும், நூற்றுக்கும் அதிகமான கப்பல்களை சோமாலிய கடல் கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதற்கிடையே, கடந்த 15ஆம் திகதி 'எம்.வி.கோட்டா வாஜர்' என்ற சிங்கப்பூர் கப்பல், செஷல்ஸ் தீவுக்கு அருகே சென்ற போது, சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.
இந்தக் கப்பலில் இரண்டு இந்தியர்களுடன் இலங்கை, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களும் இருந்தனர். கப்பலையும், கப்பலில் இருக்கும் ஊழியர்களையும் மீட்க, கப்பல் நிறுவனம் சிங்கப்பூர் அரசின் உதவியை கோரியுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’