







உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபராக திருமதி சிரானி மில்ஸ் அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் ஆண்டகை தியாகராஜாவினால் நியமனக் கடிதம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னிலையில் இன்று காலை வழங்கப்பட்டது.
இன்று காலை உடுவில் மகளிர் கல்லூரியிலுள்ள தேவாலயத்தில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மதகுருமார்கள் கலந்து கொண்ட பூஜை ஆராதனைகளைத் தொடர்ந்து ஆண்டகை தியாகராஜாவினால் உடுவில் மகளிர் கல்லூரி அதிபராக உத்தியோகபூர்வமான நியமனக் கடிதம் திருமதி சிரானி மில்ஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆண்டகை தியாகராஜா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அதேவேளை புதிய அதிபர் திருமதி சிரானி மில்ஸ் ஏற்கனவே தற்காலிக அதிபராகக் கடமையாற்றிய ஆசிரியை ஆகியோரும் உரிய வகையில் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’