வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 10 அக்டோபர், 2009

பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்


பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். ராணுவத் தளபதி பர்வேஸ் கயானியின் குடியிருப்புக்கு அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் பலர் இன்று பகல் 11.45 மணியளவில் ராணுவ தலைமையத்தின் மீது அதிரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கையெறி குண்டுகளையும் வீசியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ராணுவ வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 2 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவத் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் ராணுவ உயரதிகாரிகள் பலர் அங்கு இருந்ததாகவும், தலையகத்தில் இருந்து வெளியே வரமுடியாத நிலையில் அவர்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’