வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

ஞாபக சக்தியை குறைக்கும் ரத்த அழுத்தம்


ஞாபக மறதி எல்லோருக்கும் பொதுவாக இருப்பது உண்டு. இதே ஞாபக மறதி உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்று கண்டறிந்து இருக்கிறார் கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

இவர்களது ஆய்வுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் உட்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு ஞாபக மறதி அதிகரித்து இருப்பதும், சிந்தனை செயல்திறன் அதிகமாக குறைந்திருப்பதும் தெரிய வந்தது.

இதுபற்றி ஆய்வாளர்கள் கூறும்போது, `ரத்த அழுத்தம் இருந்தால் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயின் சுவர்கள் தடிமனாகிவிடும். மேலும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் இழந்து விடுகிறது. இதனால், இந்த ரத்தக்குழாய் வழியாக ரத்தமானது சீராக செல்ல முடியாது. அதன் காரணமாக, மூளைக்கு போதுமான ரத்தம் செல்வதும் தடுக்கப்படுகிறது. அதனால், ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு ஞாபக மற்றும் சிந்தனைத் திறன் இழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன' என்றனர். நன்றி இணையம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’