வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

சமையல் சமையல்

இனிப்பு குழிப் பணியாரம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கப்

அவல் – அரை கப்

வெல்லம் – ஒ‌ன்றரை கப்

ஏலக்காய் – கா‌ல் டீஸ்பூன்

நல்லெண்ணெய் – சுடுவதற்கு

செய்முறை

அரிசியையும், அவலையும் தனித்தனியாக நன்றாகக் கழுவி தனியாக ஊற வைக்கவும். இர‌ண்டையு‌ம் ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு நைசாக அரைத்து பிறகு வெல்லத்தையும் போட்டு அரைக்கவும். ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். இ‌ட்‌லி மாவு பத‌த்‌தி‌ற்கு இரு‌க்க வே‌ண்டு‌ம்.

பணியார சட்டியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றவும். மாவு அடிப்பகுதியில் வெந்ததும், குச்சி அல்லது ஸ்பூன் உதவியால் திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான ப‌ணியார‌ம் தயா‌ர்

பப்பாளி ஜூஸ்

தேவையான பொருட்கள்:- பப்பாளி பழம் - 1

பால் - 1 கப்

தண்ணீர் - 2 கப்

சர்க்கரை - 5 ஸ்பூன்

தேன் - 1 ஸ்பூன்

செய்முறை:

பப்பாளி பழம் , பால், சர்க்கரை, தேன், ஐஸ் கட்டி, தண்ணீர் அனைத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். சுவையான பப்பாளி ஜூஸ் தயார்.

தயிர் மீன்

தேவையான பொருட்கள்

மீன் 500 கிராம் தயிர் 2 க ப் எண்ணெய் 4 டேபள்பூன் கொஞ்சம் சோளமாவு, பட்டை கிராம்பு, ஏலக்காய், இஞ்சி தேவையான் அள்வு வெங்காயம் கால் கிலோ மிளகாய் பொடி 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்பொடி 1 டீஸ் பூன் ,சர்க்கரை ,ஒரு சிட்டிகை உப்பு தேவையான அளவு

செய்முறை

மீனை கழுவி சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். வானிலியில் எண்ணேய் ஊற்றி சூடாக்கி இலேசாக மாவில் ப்ரடி எடுத்து கோல்டன் நிறத்திற்கு வறுத்துக் எடுத்துக்கொள்ளவும், அதே வானியிலில் எண்ணேய் ஊற்றிக்கொள்ளவும் மிளகாய்பொடி மஞ்சள்பொடி சிறிது தண்ணீர் தெளித்து சிறிது நேரம் வதக்கவும்.இதனுடன் தயிர் கலந்து எண்ணெய் மேலே எழும்பும் வரை குறைந்த தணலில் கொதிக்க விடவும் மீன்துண்டுகள் உப்பு சக்கரை சேர்த்து கிரேவி லேசாக இறக்கும் வரை கொதிக்க விடவும். இதை சாதத்துடன் பரிமாறலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’