
சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளைக் கொண்ட 'சகோதர சங்கம விழா' வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை மாகாணக் கல்வி அமைச்சின் முன்பள்ளி அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் தமிழ், சிங்கள, முஸ்லிம் சிறுவர்கள் பங்கு கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. போரின் பின்னரான சமூக அபிவிருத்திக்கு அடிப்படையான இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, ஐக்கியம், சமாதானம் போன்ற விடயங்களை வலியுறுத்துவதாகக் கலை நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன என்பது குறி்ப்பிடத்தக்கது.
இவ்விழாவில் பிரதம விருந்தினர்களாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, மீள்குடியேற்ற, அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது. எனினும் அவர்கள் கலந்து கொள்ளாததனால், பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் உயரதிகாரிகள் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சிறுவர்கள் மத்தியில் இன ஐக்கியத்தையும் நேச உறவையும் வளர்ப்பதன் அவசியம் குறித்து இந்த நிகழ்வில் உரையாற்றிய பலரும் வலியுறுத்தினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’