சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்து அகதி அந்தஸத்து கோரிய இரு இலங்கையர்கள் பலவந்தமாக நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக செனட்டர் இவான்ஸ் கூறுகையில் ,"பிரதமர் ரூட்டின் அரசாங்கம் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது.எமது சர்வதேச விதிமுறைகளிற்கு அமைய அவுஸ்திரேலியாவிற்குள் வருவோரிற்கு நாம் போதுமான பாதுகாப்பை வழங்குவோம்.சட்டவிரோதமாக நுழைவோரிற்கு பாதுகாப்பு வழங்கமாட்டோம்.அவ்வாறு வருவோர் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்படுவர்" எனத்தெரிவித்தார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் வந்த 9 இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்திருந்தார்.
இவர்களுள் நால்வர் தமது சுயவிருப்பில் நாட்டிற்கு திரும்பிச்செல்ல விரும்பியதையடுத்து சென்றுள்ளனர்.இருவர் தாம் நாட்டிற்கு திரும்பச்சென்றால் உயிராபத்து உள்ளதாக தெரிவித்துள்ளர்,இன்னுமொருவர் நாடுசெல்ல விருப்பம் தெரிவித்ததையடுத்து பேர்த்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’