
அவதூறாக பேசிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பத்திரிகையாளர் சங்கங்கள் கொடுத்த புகார் மனு, சட்ட நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. நிபுணர்களின் கருத்து கிடைத் தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.
விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரியை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவதூறு செய்தி வெளியிட்டதாக நடிகர் சங்க புகாரைத் தொடர்ந்து, “தினமலர்’ செய்தி ஆசிரியர் லெனின் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, “சிடி’ ஆதாரங்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, “புகார் மனு, சட்ட நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள் ளது. சட்ட நிபுணர்களின் கருத்து கிடைத்தவுடன் நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னை நகரில் 466 தற்காலிக பட்டாசு கடைகள், வடசென்னையில் 19 நிரந்தர பட்டாசு கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள் ளது. விபத்து நடந்து ஒரு மணி நேரம் வரை கோல்டன் ஹவர்ஸ் என்பர். அந்த சமயங்களில் 108 மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். பட்டாசுகளை வெடிப்பவர்கள் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறினார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’