இன்று அந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்டுக் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் முற்பணமாக 5000 ரூபா வீதம் வழங்கியுள்ளதுடன் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குத் தேவையான உலருணவுப் பொருட்கள் அம்மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அந்த மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் கருத்துத் தெரிவித்த போது தற்போது வழங்கப்பட்டுள்ள உதவிகளுடன் தொழில் செய்வதற்குத் தேவையான தொழில் உபகரணங்களும் வீட்டுப் பாவனைப் பொருட்களும் அம்மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்ததுடன் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறந்து எதிர்காலத்தை சுபீட்சமாக அமைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் அம்மக்கள் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சாவகச்சேரி கலாசார மண்டபத்திற்கு வருகைதந்தவர்கள் பதியப்பட்டு உடனடியாக அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’