வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

முதலமைச்சர் பிள்ளையானின் அம்பாறை மாவட்டத்திற்கான உப- செயலகத்திற்கு எதிராக அக்கரைப்பற்றில் மீண்டும் ஆர்ப்பாட்டம்.!! பின்னணியென்ன??


அக்கரைப்பற்றுப் பகுதியில் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரின் அம்பாறை மாவட்டத்திற்கான உப-செயலகம் திறக்கப் படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை முற்பகல் ஆர்பாட்டப் பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது. அக்கரைப்பற்று- பொத்துவில் வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்னும் ஓரிரு தினங்களில் முதலமைச்சரின் உப செயலகம் திறக்கப்படவுள்ளது. இதற்கான வேலைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்ற முற்பகல் 10.15 மணியளவில் திருக்கோவில், தம்பிலுவில், ஆலையடிவேம்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆலையடிவேம்பு, சின்ன முகத்துவாரம் என்னும் இடத்தில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவாறு பேரணியாக வந்து முதலமைச்சரின் உப செயலகம் முன்னால் முற்பகல் 11.20 மணிவரையான 40 நிமிடங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமைதியாக இருக்கும் தமது பிரதேசத்தை வி;ட்டு வெளியேறு, அன்று இல்லாத ஊர்பற்று மற்றும் தமிழ்பற்றும் இன்று ஏன் உனக்கு??, எமது பொறுமை பொல்லாதது அதை சோதிக்காதே அது உனக்கு ஆபத்து!, இவ்வளவு காலமும் இல்லாத அம்பாறை உனக்கு இப்போது எதற்கு?? என்பன போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது முதலமைச்சருக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் கொடும்பாவி ஒன்றையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். இதனையடுத்து அம்பாறைக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சில் ஈடுபட்டு சுமுகமான நிலைமை ஏற்பட்டவுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டப்பேரணி நடப்பதற்கு முன்னரே கல்முனை பிரதேசத்தில் இருந்து வந்த கூடுதலான கலகம் அடக்கும் பொலிஸார் அக்கரைப்பற்று நகர், அக்கரைப்பற்று பொத்துவில் வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர். பிற்குறிப்பு:- கிழக்கு அரசியல் நிலவரம் கிழுகிழுப்பூட்டுவதாக இருக்கின்றது. கடந்த திங்கட்கிழமை ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்து, இந்தத் திங்கட்கிழமையும் ஆர்ப்பாட்டம். அம்பாறை மாவட்டமும் கிழக்கு மாகாணசபைக்குச் சொந்தமானதே. அங்கு முதலமைச்சர் உப செயலகம் மிகவும் அவசியமானதே. அதன் மூலமாகவே அப்பிரதேச மக்களது தேவைகளையும் நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். அம்பாறையில் மூவினமக்களும் வாழ்ந்து வருகின்ற நிலையில், தமிழ் பற்றென்று கூறி இளைஞர்கள் சிலர் அலுவலகத்தை அமைக்கக் கூடாதென்பதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும் வியப்பாக இருக்கிறது. இதேபோல், உப அலுவலகம் அமைக்கவே வேண்டும் என்று மற்றத்தரப்புக் கிளம்பினால் விகிதாசார வித்தியாசம் எப்படியிருக்குமோ?. எமது பொறுமை பொல்லாதது, அதை சோதிக்காதே, அது உனக்கு ஆபத்து என்பதெல்லாம் “புலிவாடை” அடிக்கும் வார்த்தைகளாகத் தெரிகிறது. ஆனால், இதனை யார் நடத்துகிறார்கள் என்று எமக்குத் தெரியாது. முதலமைச்சரினால் தான் அம்பாறை மாவட்டத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்ற நிலையிருக்க, மக்கள் முதலமைச்சரை எதிர்த்து நிற்பது யாரை நம்பியோ? ஹையோ, ஹையோ…. ஒரு வருடந்தானே கடந்திருக்கிறது, இன்னும் நான்கு வருடங்கள் இருக்கிறதல்லவா? அதற்குள் இந்த அவசரம் ஏனோ, அதுவும் அம்பாறையை மையப்படுத்தி ஏனோ? தெரிந்தால் வாசகர்கள் தெரிவிக்கலாம். பொலிஸ் அதிகாரங்கள் கிழக்கு மாகாணசபைகளுக்குத் தேவையில்லையென்று சிலர் தெரிவிப்பது.. இது போன்ற ஆர்ப்பாட்டங்களை ஆடம்பரமாக நிறைவேற்றத் தான் போலும்…!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’