
போலி இந்தியன் கடவுச்சீட்டு மூலம் பிரான்ஸ் செல்ல முற்பட்ட இலங்கையர் ஆறுபேரை இந்தியாவின் கைதாரபாத் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகள் நேற்று காலை கைது செய்துள்ளனர். முகவர் ஒருவரால் இந்தியன் கடவுச்சீட்டுக்கு போலி விசா தயாரிக்கப்பட்டு இந்தியாவின் கைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இருந்து எமிரேட் விமானம் மூலம் பிரான்ஸ் செல்ல முற்பட்டபோதே ஏழுபேரையும் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.இவர்களில் 6பேர் இலங்கை தமிழர் ஆவர், போலி விசா மூலம் செல்ல முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இவர்களை புலனாய்வு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இலங்கையர்கள் ஆறு பேரில் ஒருவர் பெண் என்றும் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஏனையோர் இலங்கையின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’