வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு சட்டவிரோத படகு பிடிபட்டுள்ளது



இலங்கையர்களை ஏற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சட்டவிரோத படகு ஒன்றை அவுஸ்ரேலிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஏழுபேரை கொண்ட இந்த படகு அவுஸ்ரேலியாவின் ஏஸ்மோ தீவுக்கு அப்பால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்விரோத குடியேறிகளும் படகோட்டியும் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பென்டன் ஓ கோணர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சட்டவிரோத குடியேறிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, இந்த வருடத்தில் மாத்திரம், சுமார் 19 படகுகளில் சட்டவிரோத குடியேறிகள், அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’